ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு! இலங்கை அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகள்
கடந்த எட்டு மாதங்களில் அரசாங்கம் கடுமையாக உழைத்தமையே இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்திருப்பதன் மூலம் எடுத்துக்காட்டப்படுகிறது என்று நீதி மற்றும் சிறைச்சாலை நடவடிக்கைகள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கையும் கட்டுப்பாடுகளும்

தொடர்நதும் தெரிவிக்கையில்,
கடந்த எட்டு மாதங்களில் நாங்கள் மேற்கொண்ட கடின உழைப்பின் பலன்களை இது காட்டுகிறது. பணத்தை அச்சடிக்கக் கூடாது என்பதுதான் நாங்கள் முதலில் ஏற்றுக்கொண்ட கொள்கை. இரண்டாவதாக, இறக்குமதிக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம்.
ஏற்றுமதியாளர்களுக்கு முடிந்தவரை சில சலுகைகளையும் கொடுத்தோம். அரசின் ஸ்திரத்தன்மை குறித்து மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதனால், எங்கள் நாணயத்தின் பெறுமதி உயர்ந்துள்ளது.
மேலும், ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகின்றனர். கடந்த மாதம் 110,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
ஜனவரி மாதம் 102,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்தனர். நாங்கள் மேற்கொண்ட ஏராளமான முயற்சிகளின் முடிவுகள் அவை என குறிப்பிட்டுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam