பல ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் பரவும் நோய்.. விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
பல ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் முதல் தட்டம்மை நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில் கட்டாயம் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
இலங்கையில் முன்னர் இல்லாது போன நோயான தட்டம்மை, நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ளது என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சுகாதார அமைச்சகத்தின்படி, கொழும்பு மாவட்டத்தில் குழந்தைகளுக்கு இரண்டு நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது, நோய் மீண்டும் பரவக்கூடும் என்ற கவலையை எழுப்பியுள்ளது.
உடனடி அவதானம் தேவை..
தட்டம்மைத் தடுப்பூசி பெறாத அல்லது ஒரு டோஸ் மட்டுமே பெற்ற குழந்தைகள், தாமதமின்றி முழுத் தடுப்பூசி அட்டவணையையும் பூர்த்தி செய்வதை உறுதி செய்யுமாறு அதிகாரிகள் பெற்றோரை வலியுறுத்துகின்றனர்.

2019ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பால் இலங்கை தட்டம்மை இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், 2023ஆம் ஆண்டு முதல் சில பகுதிகளில் ஆங்காங்கே நோய் பரவல் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
சுகாதார அமைச்சகத்தின் நோய்ப்பரவியல் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியான வைத்தியர் அதுல லியனபதிரான, ஜனவரி 2025 முதல் எந்த நோய்த்தொற்றும் பதிவாகவில்லை என்றாலும், சமீபத்தில் இரண்டு நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டது கவலைக்குரிய விஷயம் என்று தெரிவித்தார்.
நிலைமை தீவிரமடைந்து ஒரு பெருந்தொற்றாக மாறுவதைத் தவிர்க்க, உடனடித் தடுப்பு நடவடிக்கைகள் தேவை என்பதை அவர் வலியுறுத்தினார்.
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam