புலம்பெயர் தொழிலாளர்கள் ஊடாக நாட்டிற்கு கிடைத்துள்ள பெருந்தொகை பணம்
கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணத்தின் அளவு 26.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLSFS) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பிய பணம்
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளை மேற்கோள் காட்டி, 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பிய பணமாக 2.294 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாடு பெற்றுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரியில் 751 மில்லியன் டொலர்களும், பெப்ரவரியில் 729 மில்லியன் டொலர்களும், மார்ச்சில் 815 மில்லியன் டொலர்களும் பெறப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பெறப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் மொத்தப் பணத்தின் அளவு 1,815 மில்லியன் டொலர்கள் ஆகும்.
இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் இறுதி வரை 62,145 தொழிலாளர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam