ஐக்கிய நாடுகளின் கோரிக்கையை நிராகரித்த இலங்கை...!
இலங்கை கடல் பகுதியில், நீண்டகால உணவுப் பாதுகாப்பை மதிப்பிடும் வகையில், தமது, ஆராய்ச்சிக் கப்பலை அனுமதிக்க வேண்டும் என்ற, ஐக்கிய நாடுகளின் கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது.
இந்த கப்பலை, 2025, ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 20 வரை, இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று, ஐக்கிய நாடுகள் சபை கோரியிருந்தது.
மறுப்புக்குக்கான காரணம்
எனினும்,வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை இறுதி செய்வதில் ஏற்பட்ட தாமதமே, இந்த மறுப்புக்குக் காரணம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்களை அனுமதிக்க அங்கீகரிக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறை இல்லாததால், ஆராய்ச்சி கப்பல் வருகை ரத்து செய்யப்பட்டது, எனினும், இது நேரடி நிதி இழப்புகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், பசுமை காலநிலை நிதியத்தால் நிதியளிக்கப்படும் காலநிலை தழுவல் திட்டங்களின் செயல்திறனையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, இந்த விடயத்தை மறுபரிசீலனை செய்து, தமது கொடியின் கீழ் பணியைத் தொடர அனுமதிக்குமாறு, ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 10 மணி நேரம் முன்

அம்மா என சொன்ன கிரிஷ், வசமாக சிக்கிக்கொண்ட ரோகிணி.. சிறகடிக்க ஆசை சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam
