மருந்து இறக்குமதி தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு
நாட்டின் மருந்து இறக்குமதியிலிருந்து 30 சதவீதத்தினை 2030ஆம் ஆண்டளவில் குறைக்க முடியும் என இலங்கை மருந்துத் தொழிற்றுறை சம்மேளனம் (Chamber of the Pharmaceutical) தெரிவித்துள்ளது.
மருந்து உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள பைபேக் (buyback) உத்தரவாதமும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
"தற்போது, 15 வீதத்திற்கும் அதிகமான மருந்து உள்ளூர் சந்தை உற்பத்தியால் ஆனது.
உற்பத்தித் திறன்
கடந்த 10 ஆண்டுகளில் காணப்படுகின்ற குறிப்பிடத்தக்க அதிகரிப்பினால் உள்ளூர் உற்பத்தித் திறன் 2030ஆம் ஆண்டில் ஏறத்தாழ 30 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் மருந்துத் தொழில் சுமார் 60,000 வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. 1950களில் இலங்கை மிகவும் வலுவான மருந்து உற்பத்தித் தளத்தைக் கொண்டிருந்தது.
ஆனால், தேசியமயமாக்கல் காரணமாக பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியா (India), பங்களாதேஷ் (Bangladesh) மற்றும் பாகிஸ்தானுக்குச் (Pakistan) செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மருந்து ஏற்றுமதி
குறித்த தனியார் மருந்துத் தொழிலாளர்கள் அங்கு தொழிற்சாலைகளை நிறுவி இப்போது இலங்கைக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.

இந்நிலையிலேயே, உள்ளூர் மருந்துத் தொழில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பினை கொண்டிருக்கின்றது.
அதில் 300 மில்லியன் தனியார் துறை மற்றும் 200 மில்லியன் அரச துறையை சேரந்ததாகும்.
மேலும், அரசு மற்றும் தனியார் ஆகிய இரண்டையும் சேர்த்து 172.13 பில்லியன் ரூபாவும் தனியார் துறையிலிருந்து 129.13 பில்லியன் ரூபாவாகவும் காணப்படுகின்றது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு News Lankasri