நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு ஏற்படவுள்ள சிக்கல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்காக செலவினங்கள் வெளியிடப்படவுள்ளது.
இதற்காக அரசாங்கம் மேற்கொண்ட செலவுகள் தொடர்பான விடயம் நாளை மறுதினம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை ஜனாதிபதி பங்கேற்ற வெளிநாட்டு பயணங்கள், ஒவ்வொரு பயணத்திலும் சந்தித்த வெளிநாட்டு தலைவர்கள் தொடர்பில் தனித்தனியாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணங்கள்
அந்த அரச தலைவர்களுடன் இராஜதந்திர ரீதியில் செய்துள்ள உடன்படிக்கைகள் மற்றும் அந்த உடன்படிக்கைகளில் எட்டப்பட்ட விடயம் குறித்தும் கேள்வி எழுப்பப்படவுள்ளது.

ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்திலும் ஜனாதிபதியுடன் பங்குபற்றிய தூதுக்குழுவினருக்கும் அதற்காக செலவிடப்பட்ட தொகையையும் தனித்தனியாக வழங்குமாறு கோரப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.
களுத்துறை மாவட்ட உறுப்பினர் ஜெயந்த சமரவீர, பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இந்தக் கேள்வியை முன்வைத்துள்ளார்.
அந்த குழந்தையா இது!! சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்தவர் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க! சமீபத்திய புகைப்படம்.. Cineulagam
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri