இலங்கை 5 ஆண்டுகளில் இழந்த வருமானத்தில் 40% ஐ மீட்டெடுத்துள்ளது- ஐஎம்எப்
அண்மைய ஆண்டுகளில் இலங்கையின்(Sri Lanka) பொருளாதார மீட்சியைப் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான மூத்த செயல்பாட்டு தலைவர் பீட்டர் ப்ரூயர் பாராட்டியுள்ளார்.
அத்துடன், இலங்கைக்கு பொருளாதார வாய்ப்புகள் திரும்பும்போது, நாட்டின் வருமானம் அதிகரிக்கும் மற்றும் வறுமை குறைக்கப்படும் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வை, சர்வதேச நாணய நிதிய நிர்வாக சபை நிறைவு செய்தமை குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அவர், இலங்கையின் இருப்புக்கள் இதுவரை கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
பொருளாதார நடவடிக்கை
அவர்கள் ஏற்கனவே திட்ட நோக்கங்களில் பாதியை அடைந்துள்ளனர், இது மிகவும் வரவேற்கத்தக்கது என்று ப்ரூயர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் விடயங்கள் உண்மையில் கணிசமாக மாறிவிட்டன என்பது தெளிவாகத் தெரிகிறது. 2022,ஜூனில் தாம், முதன்முதலில் இலங்கைக்கு சென்ற போது, எரிபொருள் பெற, சமையல் எரிவாயு பெற, உணவு அல்லது மருந்து பெற எங்கோ ஒரு வரிசையில் அனைவரும் நின்றனர்.
பொருளாதார செயல்பாடு மிகவும் மந்தமாக இருந்தது. இந்த நெருக்கடியின் விளைவாக இலங்கை அதன் பொருளாதார நடவடிக்கைகளில் சுமார் 10% இழந்திருந்தது.
சமீபத்திய வளர்ச்சி
அப்போதிருந்த அடிப்படையில், 2023 முதல், இந்தத் திட்டம் இருந்த குறுகிய காலத்தில், முந்தைய 5 ஆண்டுகளில் இழந்த வருமானத்தில் 40% ஐ ஏற்கனவே மீட்டெடுத்துள்ளது.
குறுகிய காலத்தில் இலங்கை ஏற்கனவே மிகவும் குறிப்பிடத்தக்க மீட்சியைக் கொண்டுள்ளது மிகச் சமீபத்திய வளர்ச்சி வீதம் 5.5% ஆகும்.
எனவே இலங்கையில் விஷயங்கள் கணிசமாக மாறி வருகின்றன என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான மூத்த செயல்பாட்டு தலைவர் பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நடிகையுடன் கிசுகிசு.. உண்மையான மனைவி போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் ஸ்டாலின் Cineulagam

ரசிகர்கள் கொண்டாடிய அமரன் திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்த அங்கீகாரம்.. என்ன தெரியுமா? Cineulagam
