கிளிநொச்சியை வந்தடைந்த ஐந்து நாடுகளின் பெளத்த தேரர்கள்
உலக சுகந்திரம் வேண்டி திஸ்ஸமகாராம(அம்பாந்தோட்டை) முதல் நாகதீபம் (நயினாதீவு) வரை இலங்கை உட்பட ஐந்து நாடுகளின் பெளத்த தேரர்கள் முன்னெடுத்துள்ள பாதயாத்திரை நேற்று(03.03.2025) கிளிநொச்சியை வந்தடைந்தது.
கிளிநொச்சியை வந்தடைந்த தேரர்களை யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்கள் வரவேற்றனர். வீதியிலிருந்து பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சரசவி விகாரை வரை மாணவர்கள், விரிவுரையாளர்கள் வரவேற்றனர்.
அவர்கள், இன்றையதினம்(04) கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி தமது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.
பாதயாத்திரை
தாய்லாந்து, மியன்மார், இலங்கை, லாகோஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 50 தேரர்கள் குறித்த பாத யாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.
பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி குறித்த பாதயாத்திரையை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri

ரசிகர்கள் கொண்டாடிய அமரன் திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்த அங்கீகாரம்.. என்ன தெரியுமா? Cineulagam

நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு- இதெல்லாம் நடக்க காரணம் இவர்தானா? Manithan
