கொழும்பின் புறநகர வீடொன்றில் மர்ம படுகொலை - விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்
கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை, ஹெந்தல பகுதியிலுள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்தவர் தொடர்பான பல தகவல்கள் விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 27 ஆம் திகதி வீடொன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், வீட்டின் உரிமையாளரை பல நாட்களாக காணவில்லை எனவும் வத்தளை பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் நபர் ஒருவர் தகவல் வழங்கியுள்ளார்.
முறைப்பாட்டின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, வத்தளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, குற்றப்பிரிவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் அதிகாரிகள் வீட்டை நேரில் ஆய்வு செய்தனர்.
வீட்டின் உரிமையாளர்
இதன்போது வீட்டின் உரிமையாளர் சில நாட்களுக்கு முன்னரே உயிரிழந்தமை தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் 56 வயதான சம்லி ஹெர்மன் கோம்ஸ் என்ற தொழிலதிபர் ஆவார்.
உயிரிழந்தவர் திருமணமானவர் எனவும் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் மனைவியிடமிருந்து பிரிந்து, இந்த வீட்டில் தனியாக வசித்து வந்த எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த நபரின் பிரேத பரிசோதனை முதலாம் திகதி ராகம மருத்துவமனையால் வத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அனுப்பப்பட்டது, அதில் கூர்மையான ஆயுதத்தால் கழுத்தில் வெட்டப்பட்டதால் மரணம் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நபர் கடந்த மாதம் 19 ஆம் திகதி உயிரிழந்தார் என்பதும், பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்படும் வரை, கடந்த மாதம் 27 ஆம் திகதி வரை உடல் வீட்டிலேயே இருந்தது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பில் வீட்டின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய முயற்சித்த போது, அவை ஏற்கனவே அகற்றப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
வாக்குமூலம்
இந்த வீட்டை உள்ளடக்கிய மற்றொரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம், 19 ஆம் திகதி வீட்டிற்கு வந்த முச்சக்கர வண்டி தொடர்பான தகவலை வத்தளை பொலிஸார் கண்டுபிடித்தனர். இது மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
முச்சக்கர வண்டி அடையாளம் காணப்பட்டு அதன் உரிமையாளர் ஒரு வாக்குமூலம் பெற்றார். வழமையாக குறித்த வீட்டில் தேங்காய் மற்றும் கறிவேப்பிலை பெற செல்வதாகவும் குறிபிட்டுள்ளார்.
எனினும், லஹிரு என்ற நபரின் ஆலோசனையின் பேரில் தான் அன்றைய தினம் இறந்தவரின் வீட்டிற்குச் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். அவரது அறிக்கையின்படி, அடுத்த சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட லஹிருவை கைது செய்ய வத்தளை பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் அதற்குள் அவர் அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேக நபரான லஹிருவை கண்டுபிடிக்க விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டன. நேற்று மாலை 5.00 மணியளவில் வத்தளை பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
தங்க நகை
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தங்க நகைகளைக் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் இந்தக் கொலையைச் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.
சந்தேக நபர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி மற்றும் கருவிகளையும், கையடக்க தொலைபேசியையும் காட்டுப் பகுதியில் ஏறிந்தாக குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபரின் வாக்குமூலங்களின் அடிப்படையில் அவை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. 22 வயது சந்தேக நபர் வத்தளை பகுதியில் வசிக்கும் திருமணமானவர். அவருக்கும் இறந்தவருக்கும் சிறிது காலமாக ஒரு தொடர்பு இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
