எரிபொருள் இறக்குமதிக்காக ஓமானிடமிருந்து கடன் தொகையை பெறும் இலங்கை
எரிபொருளை இறக்குமதி செய்ய ஓமான் நாட்டிடம் இருந்து 3 ஆயிரத்து 600 மில்லியன் டொலர் கடனை பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Utaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
இந்த கடன் தொகைக்கு மேலதிகமாக எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர்களை கடனாக பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் திறைசேரியின் அனுமதியை பெற அந்த யோசனை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை , இந்த மாதத்திற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய தேவையான டொலர்களை வழங்குவதாக மத்திய வங்கியின் ஆளுநர் உறுதியளித்துள்ளார்.
இந்த நிலைமையில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் உருவாக்கிய கனவு எந்த வகையிலும் நனவாகாது எனவும் எரிசக்தி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam