கோவிட் பரவலில் ஆசியாவில் இரண்டாம் இடத்தை பிடித்த இலங்கை
கடந்த ஒரு வார காலப்பகுதியில் இலங்கையில் கோவிட் பரவல் வேகம் 82 வீதமாக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளன.
தினமும் கோவிட் தொற்று குறித்து பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளும் பிரபல Worldometers இணையத்தளத்தின் புதிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெற்காசியாவில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது நேபாளத்திலேயே அதிக கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன் அதிகரிப்பு 105 வீதமாகும்.
அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் இந்தியாவில் கோவிட் பரவலின் வேகம், அந்த நாட்டு மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது 11 வீதமாகும். அது தெற்காசியாவில் குறைந்த நோயாளர்களின் வீதமாகும்.
அதற்கமைய இந்த பட்டியலில் முதலாது இடத்தை நேபாளமும், இரண்டாவது இடத்தில் இலங்கையும் மூன்றாவது இடத்தில் மாலைத்தீவும் பதிவாகியுள்ளது.
