தேசிய இணையப் பாதுகாப்பு சுட்டியில் உலகளாவிய ரீதியில் இலங்கை 69 ஆவது இடத்தில்
தேசிய இணையப் பாதுகாப்பு சுட்டியில் உலகளாவிய 160 நாடுகளில் இலங்கை 69ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கணணி அவசர சேவைப்பிரிவு இதனை அறிவித்துள்ளது.
இணையக்குற்றங்களை தடுத்தல் மற்றும் இணையக்குற்றங்களை முகாமைப்படுத்தல் என்ற அடிப்படையில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்படுகிறது.
2020ஆம் ஆண்டில் இந்த தரப்பட்டியலில் இலங்கை 98ஆவது இடத்தில் இருந்தது.
எனினும் 2021இல் முன்னேற்றம் அடைந்து 69 இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை உலகளாவிய இணையப் பாதுகாப்பு சுட்டியில் இலங்கை 83ஆவது இடத்தை பெற்றுள்ளது.
தகவல் தொழிநுட்ப அபிவிருத்தியில் 63ஆவது இடத்தை பெற்றுள்ளது.
இந்த சுட்டியின் படி அமெரிக்கா 16ஆவது இடத்திலும், பிரித்தானியா 18ஆவது இடத்திலும்
தரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் கட்டுப்படியாகாத நகரம் எது தெரியுமா? பணக்காரர்களுக்கு கூட வீடு வாங்க 109 ஆண்டுகள் ஆகுமாம் News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
