திடீரென இடிந்து விழுந்த குப்பை மேட்டினால் மூன்று மணி நேரமாக தடைப்பட்ட போக்குவரத்து
ஹட்டன் தொடருந்து நிலையத்தை அண்மித்த தொடருந்துப் பாதையில் பாரிய குப்பை மேடு சரிந்து விழுந்ததாக ஹட்டன் தொடருந்து நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (24) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் மற்றும் கொட்டகலை ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் குப்பைகள் அடங்கிய மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
தொடருந்து

நானு ஓயிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த சரக்கு தொடருந்து சரிந்து விழுந்த மண் மேட்டில் மோதியத்தில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புகையிரத பாதையில் இடிந்து விழுந்த குப்பை மேட்டை புகையிரத பராமரிப்பு பணியாளர்கள் அகற்றியதன் பின்னர், காலை 08.30 மணியளவில் மலையக புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடதக்கது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 2 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri