அகில இலங்கை தாதியர் தொழிற்சங்கம் போராட்டத்தில் இருந்து விலகல்
சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளவுள்ள தொழிற்சங்க நடவடிக்கையில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் அறிவித்துள்ளது.
கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போது அவர்கள் இதனை அறிவித்துள்ளனர்.
தொழிற்சங்கங்களின் கோரிக்கை
முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்ததன் பிரகாரம் பெப்ரவரி 01ம் திகதி தொடக்கம் சுகாதார சேவை சார்ந்த தொழிற்சங்கங்கள் தொடர் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளன.
மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டும் வருகை மற்றும் இடர் கொடுப்பனவான 35 ஆயிரம் ரூபா கொடுப்பனவு தமக்கும் வழங்கப்பட வேண்டும் என்று குறித்த தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
எனினும் நாளைய தினம் நடைபெறும் தொழிற்சங்க நடவடிக்கையில் இருந்து தமது தொழிற்சங்கம் விலகிக் கொள்வதாக அகில இலங்கை தாதியர் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 15 மணி நேரம் முன்

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனைவியுடன் சேர்ந்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் ஒவ்வொரு வருடமும் ரூ.1,11,000 பெறலாம்.., Post Office திட்டம் தெரியுமா? News Lankasri
