தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் நடமாடும் சேவை
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பிறப்பு,இறப்பு மற்றும் திருமண பதிவுகள் தொடர்பான நடமாடும் சேவை எதிர்வரும் எட்டாம் திகதி(08.02.2024) இடம்பெறவுள்ளது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய "புதிய கிராமம் - புதியநாடு"எனும் தொனிப் பொருளின் கீழ் இந்த நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெற்றுக் கொள்ளக் கூடிய சேவைகள்
தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை இந்த நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.

இதில் பிறப்பு, இறப்பு, திருமண பதிவுச் சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்காக சான்றிதழ்களை பெற்றுக் கொடுத்தல் மற்றும் தேசிய அடையாள அட்டை சிக்கல்களை தீர்த்தல், காணி பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெறல் என பல சேவைகளை பொது மக்கள் அன்றைய தினம் பெற்றுக் கொள்ள முடியும்.
எனவே பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan