ஐ.நா. கூட்டத் தொடரில் இலங்கை கடும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்: சுமந்திரன் எச்சரிக்கை

United Nations M A Sumanthiran Ranil Wickremesinghe Sri Lanka Prevention of Terrorism Act
By Rakesh Aug 26, 2022 06:56 AM GMT
Report

"பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் என்ற உத்தரவாதத்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கியே ஜி.எல்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கை பெற்றுக்கொண்ட நிலையில் அந்த உறுதிமொழி மீறப்பட்டுள்ளதால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் கடும் நெருக்கடிகளை இலங்கை சந்திக்க நேரிடும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு இன்று காலை வழங்கிய செவ்வியின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

"நல்லாட்சியில் பிரதமராக இருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரசல்ஸ் சென்று ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தியிருந்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம்  

Ranil Wickremesinghe

இதன்போது பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் என்ற உத்தரவாதமும் அது நீக்கப்படும் வரை அந்தச் சட்டம் பயன்படுத்தப்படமாட்டாது என்ற உறுதிமொழியும் வழங்கப்பட்டிருந்தது.

இதையடுத்தே ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்குக் கிடைக்கப்பெற்றது.

எனினும், உறுதிமொழி தற்போது மீறப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.

ஜெனிவா கூட்டத்தொடர்

United Nations

இதன் தாக்கம் ஜெனிவா கூட்டத்தொடரில் எதிரொலிக்கும். போராட்டக்காரர்கள் வன்முறைகளில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நாட்டில் உள்ள சாதாரண சட்டம் போதுமானது.

வன்முறை என்பது தவறு தான். ஆனால், எல்லா வன்முறைகளும் பயங்கரவாத நடவடிக்கையாக அமையாது.

குறிப்பாக தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளின் அலுவலகங்கள் தாக்கப்படும். அது பயங்கரவாத நடவடிக்கையா?

போராட்டக்களத்தில் இருந்த முன்களப் போராளிகள் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி வேட்டையாடப்படுகின்றனர். இது தவறான அணுகுமுறையாகும்.

அவசரகாலச் சட்டத்தை மாதாந்தம் நாடாளுமன்றத்தின் அனுமதியுடன்தான் நீடிக்க வேண்டும். சிலவேளை 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதி வழங்காமல் இருக்கலாம் என்பதற்காகவும் வழங்கிய வாக்குறுதியை மறந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசு கையில் எடுத்துள்ளது" என்றார். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US