பயங்கரவாதச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்! தமிழ்க் கட்சிகள் கோரிக்கை

M A Sumanthiran Sri Lanka Sri Lankan political crisis Sri Lanka Prevention of Terrorism Act
By Rakesh May 08, 2023 06:19 AM GMT
Report

"பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக எந்தவொரு முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்கப்போவதில்லை. அந்தச் சட்ட வரைவு கைவிடப்பட வேண்டும். அதேவேளை, தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டமும் முழுமையாக நீக்கப்பட வேண்டும்" என தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவுக்கு எழுந்த எதிர்ப்பையடுத்து அதனை முன்வைக்க பிற்போட்டுள்ள அரசு, சட்டவரைவு தொடர்பில் திருத்தங்களை முன்வைக்குமாறு கோரியுள்ள நிலையிலேயே தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

பயங்கரவாதச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்! தமிழ்க் கட்சிகள் கோரிக்கை | Sri Lanka Prevention Of Terrorism Act

சுமந்திரன் கருத்து 

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில்,

"பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றுவோம் என்று இலங்கை அரசு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலும் வாக்குறுதிகளை அளித்திருந்தாலும் அதனைத் தற்போது வரையில் நிறைவேற்றவில்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் புதிதாக உருவாக்கப்படும் சட்ட வரைவு ஏற்கனவே உள்ளதைவிட மோசமானது.

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக பயங்கரவாதத்தைத் தடுப்பதற்குப் புதிதாக பிறிதொரு சட்டத்தை உருவாக்கத் தேவையில்லை."  என்றார்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், க.சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தெரிவிக்கையில்,

"பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும். அதற்குப் பதிலாக பிறிதொரு சட்டத்தைக் கொண்டு வருவதையோ அந்தச் சட்டத்தின் மூலமாக ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கப்படுவதையோ நாம் ஏற்றுக்கொள்ளவில்லை.

பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைவைக் கைவிடும் அதேநேரம் அரசு உடனடியாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் நீக்க வேண்டும்." என்றனர்.

பயங்கரவாதச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்! தமிழ்க் கட்சிகள் கோரிக்கை | Sri Lanka Prevention Of Terrorism Act

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தெரிவிக்கையில்,

"நிறைவேற்று அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக கைவிடும் அதேநேரம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் நீக்க வேண்டும். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தின்போது, பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு மாற்றாக புதிய வரைபொன்றை தயாரிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அந்தக் குழுவின் அங்கத்துவத்தில் நானும் உள்ளடக்கப்பட்டிருந்தேன். எனினும், எமது கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி குறித்த குழுவிலிருந்து நான் வெளியேறியுள்ளேன்." என்றார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கையில், "ஜனநாயகத்துக்கும், மனிதர்களின் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும். புதிய சட்டமொன்றைக் கொண்டு வருவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது."  என்றார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US