புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பத்திரிகை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல்: சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம்!
இலங்கையில் முன்மொழியப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது, பத்திரிகை சுதந்திரத்திற்கு கடுமையான அச்சுறுத்தல் என IFJ என்ற சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இச்சட்டம் ஒன்று கூடுவதற்கான உரிமை மீதான கட்டுப்பாடுகளை மேலும் மோசமாக்கும் என்றும் கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தைக் கடுமையாகக் குறைக்கும் எனவும் IFJ குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த சட்ட மூலத்தை, சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம், அதன் இலங்கை துணை நிறுவனங்களான இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம், ஊடக ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு, சுதந்திர ஊடக இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.
துன்புறுத்தலுக்கு முகங்கொடுக்க நேரிடும்
எனவே, உத்தேச வரைவைத் திரும்பப் பெறவும் தண்டனைக்குரிய பயங்கரவாத தனிச்சட்டத்தை இரத்து செய்யவும் இலங்கை அதிகாரிகளை இச்சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்கவும், தடைசெய்யப்பட்ட இடங்களை அறிவிக்கவும், நீதிமன்ற அமைப்புக்கு வெளியே நடத்தப்படும் நடமாட்டம் மற்றும் செயற்பாடுகளைத் தடைசெய்யவும் ஜனாதிபதிக்கு இந்த யோசனையின்படி அதிகாரம் இருக்கும்.
சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம்
இந்தநிலையில், குறித்த யோசனை நிறைவேற்றப்பட்டால், இலங்கை அரசாங்கத்தை விமர்சிப்பதாகக் கருதப்படும்.
அத்துடன், ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் மற்றும்
அவர்களது பிரதிநிதித்துவ தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகள் என்பன ஜனநாயக
விரோத மற்றும் தன்னிச்சையான ‘பயங்கரவாத நடவடிக்கைகளின்’ கீழ் சட்டரீதியான
துன்புறுத்தலுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் IFJ என்ற சர்வதேச
ஊடகவியலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.