இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்: மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

Human Rights Council Sri Lanka Sri Lanka Prevention of Terrorism Act
By Sivaa Mayuri Apr 07, 2023 12:01 PM GMT
Report

இலங்கை அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது அடிப்படை மனித உரிமைகளை முறையாக மீறுவதற்கு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிப்பதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

எனவே இந்த யோசனையை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும். அத்துடன், எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் தரத்தை நிலைநிறுத்துகிறது என்பதை ஆலோசனைகள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று (07.04.2023) வலியுறுத்தியுள்ளது. 

தற்போதுள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிராக உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியிலான விமர்சனங்களைத் தொடர்ந்து, அதனை மாற்றியமைக்க இலங்கை அரசாங்கம் உறுதியளித்தது.

இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்: மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு! | Anti Terrorism Act In Sri Lanka

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்

எனினும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, சொத்து சேதம், திருட்டு அல்லது கொள்ளை போன்ற குற்றங்களை உள்ளடக்கிய பயங்கரவாதத்தின் வரையறையை இந்த யோசனை விரிவுபடுத்துகிறது மற்றும் கூட்டம் மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கான உரிமைகளையும் இது கட்டுப்படுத்துகிறது.

இந்தநிலையில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், அமைதியான விமர்சகர்களை மௌனமாக்குவதற்கும் சிறுபான்மையினரைக் குறிவைப்பதற்கும், இலங்கை அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய இயக்குநர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு மார்ச் 22 அன்று வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு யோசனை, 1979 இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பரவலான சித்திரவதைகள் மற்றும் தன்னிச்சையான தடுப்புக்காவல்களுக்கு வழிவகுத்த இழிவான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) மாற்றும் நோக்கம் கொண்டது.

இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்: மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு! | Anti Terrorism Act In Sri Lanka

மனித உரிமைகள் பேரவை

இந்த புதிய யோசனையில் சில முன்னேற்றங்களும் உள்ளதாகக் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை செயற்பாட்டாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் பயங்கரவாத தனிச்சட்டத்தை நீக்கி, உரிமைகளை மதிக்கும் சட்டத்தைக் கொண்டு வருவதற்குப் பலமுறை உறுதியளித்துள்ளன.

அந்த வகையில், இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது 2018 இல் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொண்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த பயங்கரவாத எதிர்ப்பு யோசனை சர்வதேச தரநிலைகள் எதையும் முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்: மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு! | Anti Terrorism Act In Sri Lanka

தடுப்புக் காவல் உத்தரவு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், பாதுகாப்பு அமைச்சர் கையொப்பமிட்ட உத்தரவின் பேரில், அதிகாரிகள், சந்தேகத்துக்குரிய ஒருவரை, ஓராண்டு வரை காவலில் வைக்க முடியும்.

எனினும் முன்மொழியப்பட்ட புதிய யோசனை, பொலிஸ் துணை ஆய்வாளர்களுக்குத் தடுப்புக் காவல் உத்தரவுகளை வழங்க அதிகாரம் அளிக்கிறது, இது துஷ்பிரயோக அபாயத்தை அதிகரிக்கிறது என்று கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. 

முன்மொழியப்பட்ட புதிய யோசனை, "நியாயமான காரணங்கள்" இருப்பதாக அவர்கள் நம்பினால், யாரையும் தடுக்க, கேள்வி கேட்க, தேட மற்றும் கைது செய்ய அல்லது எந்த ஆவணம் அல்லது பொருளையும் நீதிமன்ற உத்தரவில்லாமல் கைப்பற்ற காவல்துறை மற்றும் இராணுவத்திற்கு விரிவான அதிகாரங்களை வழங்குகிறது.

1976 ஆம் ஆண்டு முதல் இலங்கை மரணதண்டனைக்குத் தடை விதித்தாலும், கொலை என்ற பயங்கரவாத குற்றத்திற்கு மரண தண்டனையை இந்த யோசனை அனுமதிக்கிறது என்றும் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்: மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு! | Anti Terrorism Act In Sri Lanka

புதிய நடைமுறைகள் 

இந்த யோசனையின்படி, காவல்துறையினரிடம் அளிக்கப்படும் வாக்குமூலங்கள் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது, சந்தேகப்படும்படியான பெண்களைப் பெண் அதிகாரிகளால் தேட வேண்டும் என்பன உள்ளிட்ட சில புதிய முறையான பாதுகாப்புகள் உள்ளன.

 கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை அறிவிப்பதற்கும், கைதி புரிந்துகொள்ளும் மொழியில் ஆவணங்களின் மொழிபெயர்ப்புகளுக்கான அணுகலை வழங்குவதற்கும், தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரை 14 நாட்களுக்கு ஒருமுறை நீதிவானிடம் முன்னிலைப்படுத்துவதற்கும், புதிய நடைமுறைகள் உள்ளன.

எவ்வாறாயினும், சட்ட மூலத்தின் கீழ் முன்மொழியப்பட்ட சுயாதீனமான இரண்டு நிறுவனங்கள், சட்டத்தால் சுயாதீனமாக இருக்காது என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய இயக்குநர் மீனாட்சி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.

மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US