அநுர தரப்புக்கு அடிப்படை அறிவுகூட இல்லை.. கடுமையாக விமர்சிக்கும் சஜித் தரப்பு
அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு, கடன் மறுசீரமைப்பு தொடர்பான அடிப்படை அறிவுகூட கிடையாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
புரிதலற்ற அநுர தரப்பு
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழுவினால் கடன் மறுசீரமைப்பு தொடர்பான அடிப்படை புரிதல் குறித்து இலங்கை பிணை முறி உரிமையாளர்கள் ஆச்சரியத்தை வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இலங்கை பிணைமுறி உரிமையாளர்கள், தமது கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல்வேறு தரப்புகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இதில், தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழுவுக்கு கடன் மறுசீரமைப்பு தொடர்பான கொள்கைகளில் புரிதல் இல்லை என அவர்கள் கூறியதாகவும் ஹர்ஷ டி சில்வா கூட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
