ஜனாதிபதி வேட்பாளராக நால்வரை களமிறக்க திட்டமிடும் மகிந்த கட்சி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவினால் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரையில் மூன்று பேரின் பெயர்கள் பொருத்தமான வேட்பாளர்கள் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல்
பசில் ராஜபக்ச மற்றும் தம்மிக்க பெரேரா மூத்தவர்களாகவும் நாமல் ராஜபக்ச இளைஞனாகவும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அடுத்த வேட்பாளராக நிறுத்தி சிறிலங்கா பொதுஜன பெரமுனவை மீண்டும் தீர்மானிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் ஆனால் அது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, பசில் ராஜபக்சவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான மேலதிக கலந்துரையாடலின் பின்னர் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என உள்ளக தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |