பதவியை இராஜினாமா செய்தால் கோட்டாபயவிற்கு காத்திருக்கும் சிக்கல் (VIDEO)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்ற பாதுகாப்பு இல்லாமல் போகும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதாக தன்னிடம் அறிவித்ததாக சபாநாயகர் நேற்றைய தினம் அறிவித்திருந்த நிலையில், ஜனாதிபதி எங்கிருந்து பதவியை இராஜினாமா செய்வார் என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவாக இந்திய இராணுவத்தை களமிறக்க மகிந்தவின் நெருங்கிய சகா பரிந்துரை |
இலங்கை அரசியலமைப்பு
மேலும்,இலங்கை அரசியலமைப்பின் படி ஒருவர் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் அவருக்கெதிராக குற்றவியல்,குடியியல் வழக்குகளை தொடர முடியாது.
இவ்வாறான நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய உடன் அவருக்கெதிராக பல வழக்குகள் தொடரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.