ஜனாதிபதி மாளிகை நீச்சல் தடாகத்தில் சவர்க்காரம் பூசி குளித்த சம்பவம்:இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்து அங்குள்ள நீச்சல் தடாகத்திற்கு இறங்கி, சவர்க்காரம் பூசி குளித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சர்வக்காரம் பூசி குளித்தவர்களில் ஒருவர் பிரதேச சபை உறுப்பினர்
இவர்களில் ஒருவர் பதுளை மாவட்டத்தில் உள்ள பிரதேசம் ஒன்றை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் எனவும் மற்றைய நபர் தலவாக்கலை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
இவர்களை கைது செய்வதற்காக பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சர்வதேசத்திற்கு மத்தியில் நகைப்புக்கு உள்ளான இலங்கை
இந்த நபர்கள் ஜனாதிபதி மாளிகையின் நீச்சல் தடாகத்திற்குள் இறங்கி, சவர்க்காரம் பூசி நீராடிய காட்சிகள் சர்வதேச ஊடகங்களில் வெளியானதன் காரணமாக இலங்கை சர்வதேசத்திற்கு மத்தியில் நகைப்புக்கு உள்ளனது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன அண்மையில் கூறியிருந்தார்.
கடந்த ஜூலை 9 ஆம் திகதி போராட்டகாரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்து அங்கு தங்கியிருந்தனர். அங்கு சென்ற போராட்டகாரர்கள் பலர் நீச்சல் தடாகத்தில் குளிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்கள் உட்பட சகல ஊடகங்களிலும் வெளியாகி இருந்தன.




