தாத்தாவாகினார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மகன் மனோஜ் ராஜபக்ச மற்றும் அவரது மனைவி செவ்வந்தி ராஜபக்ச ஆகியோருக்கு மகள் பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மருமகள் செவ்வந்தி ராஜபக்ச இன்று அமெரிக்காவில் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இந்நிலையில், முதல் பெண்மணி அயோமா ராஜபக்ச தனது புதிதாகப் பிறந்த பேத்தியைப் பார்க்க அமெரிக்கா சென்றுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதியும் அமெரிக்கா செல்ல திட்டமிடப்பட்டிருந்தாலும், நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் தொற்றுநோய் காரணமாக, அமெரிக்க பயணத்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் தடுப்பூசி செயல்முறையை விரைவுபடுத்துவதே ஜனாதிபதியின் முக்கிய குறிக்கோள் என்றும், ஜனாதிபதியின் பாரியார் அயோமா ராஜபக்ச தற்போது அமெரிக்காவில் உள்ளார் என்றும் கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan