45 இடங்களில் மின்தடை : டி.வி. சானக்க குற்றச்சாட்டு
நாட்டில் மின்தடை ஏற்படவில்லை என அரசாங்கம் கூறிவரும் நிலையில், நேற்று முன்தினம் 45 இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க தெரிவித்துள்ளார்.
தரம் குறைந்த நிலக்கரி பயன்பாட்டினால் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் என தாம் இரண்டு வாரங்களுக்கு முன்பே நாடாளுமன்றத்தில் எச்சரித்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மின் உற்பத்தி இழப்பு
முறையான அனுமதியின்றி ஒரே நேரத்தில் 45 மின் விநியோகக் கட்டமைப்புகள் (Feeders) அணைக்கப்பட்டதால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் இதனை "மின்சார செயலிழப்பு" (Power Breakdown) என அழைத்தாலும், இலங்கை மின்சார சபையின் கட்டுப்பாட்டு மைய அறிக்கையில் இது "Manual Load Shedding" (கைமுறையாக மின் சுமையைக் குறைத்தல்) எனப் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தரம் குறைந்த நிலக்கரி காரணமாக சுமார் 150 மெகாவாட் மின் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மின் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் கூறினார்.
மின்சாரத்தை துண்டிப்பதற்கு முன்னர் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) அனுமதியைப் பெறுவது கட்டாயமாகும். ஆனால், இந்த மின்தடைக்கு எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை என அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் மனீஷாவின் ஒருநாள் சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri