ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும்

United States of America Saudi Arabia Iran
By T.thibaharan Apr 08, 2026 11:21 AM GMT
Report

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஈரூடக படையணிகளும், விசேட கொமாண்டோக்களும் கடல், வான் வழியாக குவிக்கப்படுவதான செய்தி உலக ஊடகங்களின் தலைப்புச் செய்தியாகி விட்டது.

பாரசீக வளைகுடாவில் உள்ள ஈரானுக்குச் சொந்தமான சில தீவுகளைக் கைப்பற்ற அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகக் கூறப்படும் செய்திகளுக்குப் பதிலடியாக ஈரானுக்குள் அமெரிக்கப் படைகள் தரைவழியாகவோ அல்லது தீவுகளுக்குள்ளோ ஊடுருவ முயன்றால் அவர்கள் "பாரசீக வளைகுடாக்கடல் சுறாக்களுக்கு நல்ல உணவாவார்கள் என்று ஈரானிய ராணுவத்தின் காதம் அல்-அன்பியாமத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் இப்ராஹிம் சோல்பகாரி  அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இத்தகைய வளைகுடாக்கடல் பிராந்தியத்தின் போர் பதற்ற சூழலில் ஈரானுக்குள் ஒரு தரையிறக்கம் நிகழ்வதற்கான சாத்தியங்களும்,இலக்குகளும் அதன் விளைவுகளும் பற்றி அலசி ஆராய்ந்து பார்ப்பது அவசியமானது.

12 மணி நேர நீர் வெட்டு..! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்

12 மணி நேர நீர் வெட்டு..! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்

பாரசீக வளைகுடா

பாரசீக வளைகுடா கடல்பகுதியில் ஈரானுக்குச் சொந்தமான தீவுகளை நோக்கினால் வளைகுடா அந்தத்திலிருந்து ஓமான் வளைகுடா நோக்கி மேற்கிலிருந்து → கிழக்கு திசையிலுள்ள தீவுகளை ஒழுவரிசைப்படுத்திப் பார்த்தால் கார்க் தீவு, கிஷ் தீவு,லவான் தீவு, சிர்ரி தீவு, அபு மூசா,கிரேட்டர் தன்ப், லெஸ்ஸர் தன்ப், (8)கெஷ்ம் தீவு, ஹோர்முஸ் தீவு, ஹெங்காம் தீவு லராக் தீவு ஆகிய பதினொரு தீவுகள் ஈரானுக்கு சொந்தமானது.

அதே நேரத்தில் பாரசீக வளைகுடாவில் அரபு நாடுகளுக்குச் சொந்தமான முக்கிய தீவுகளான அபு அலி தீவு, தருத் தீவு, பஹ்ரைன் தீவு(Bahrain Island), ஹலுல் தீவு, அல் சஃப்லியா தீவு, தாஸ் தீவு, தல்மா தீவு, சர் பனி யாஸ், சாதியாத் தீவு, முசந்தம் தீபகற்பம், மசிரா தீவு ஆகியவை உள்ளன.

ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் | How Long Will The Us Ground Attack On Iran Last

மேற்குறிப்பிட்ட ஈரானுக்கும் அரேபிய நாடுகளுக்குச் சொந்தமானதுமான 21 தீவுகளும் நிலத் தொடர்பற்று துண்டிக்கப்பட்ட ஓமான் நாட்டுக்கு சொந்தமான முசந்தம் தீபகற்பம் ஆகியவத்திற்கும் கடல் வழி மூலம் செல்வதானால் ஹோமோஸ் நீரினை வழியாகவே செல்ல வேண்டும்.  

ஹார்முஸ் என்ற பெயருக்குப் பின்னா வரலாற்றை நோக்கினால் பாரசீகத் தளபதி “ஹார்முஸ்”  பாரசீக சாசானியப் பேரரசின் நான்காவது மன்னரான "ஹோர்முஸ்" முஸ்லிம் படைத்தளபதி இவர்களுக்கிடையிலான போர் கிபி 633ம் ஆண்டு ஏப்ரலில் தற்போதைய குவைத் நாட்டில் உள்ள காஜிமா என்ற இடத்தில் நடைபெற்றது.

பாரசீகர்கள் வெற்றி அல்லது மரணம் என்ற உறுதியோடு போர்க்களத்தில் இருந்து யாரும் புறமுதுகு காட்டிவிடக்கூடாது என்பதற்காக, பாரசீக வீரர்கள் தங்களை இரும்புச் சங்கிலிகளால் ஒரொவரோடு ஒருவர் இணைத்துக் கொண்டு போரிட்டு மடிந்தனர்.

இதுவே “சங்கிலிப்போர்” என்று அழைக்கப்படும் இந்தப் போர், "தாத் அஸ்-ஸலாசில்" என்ற பெயரில் இருந்து இது வந்திருக்கலாம் என்றும் "ஹோர்முஸ்" என்பதற்கு பாரசீக மொழியில் "ஒளியின் கடவுள்" (சரத்துஸ்திர மதத்தின் கடவுளான அஹுரா மஸ்தாவின் மற்றொரு பெயர் பேரில் இருந்து வந்திருக்லாம் எனவும் கி.பி 11–17ம் நூற்றாண்டுகளில், "ஹார்முஸ் இராச்சியம்" இந்த ராஜ்யம் பெரும் கடல் வர்த்தக மையமாக இருந்தது என்பதில் இருந்து இப்பெயர் வந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

ஹார்முஸ்" என்ற பெயர், பாரசீக மன்னரின் பெயர், உள்ளூர் மொழிச்சொல், கிரேக்கச் சொல், வரலாற்று இராச்சியம் என பல்வேறு காரணிகளின் சங்கமமாக உருவாகியுள்ளது.

ஹார்மோன்ஸ் நீரினை இது வடக்கே ஈரானையும், தெற்கே ஓமானையும் பிரிக்கும் ஒரு குறுகிய நீர் பரப்பாகும். இதன் அகலம் சுமார் 33 கிலோமீட்டர். இதன் நீளம் சுமார் 161 கிலோமீட்டர் வரை இருக்கும். ஆனால் கப்பல்கள் பயணிக்கக்கூடிய கடற்பரப்பு ஆறு கிலோமீட்டர் அகலம் மட்டும்தான்.

அமெரிக்கா - ஈரான் போர்: மத்தியஸ்தம் செய்ய முயலும் பாகிஸ்தானுக்கு சவூதி தாக்குதலால் பின்னடைவு!

அமெரிக்கா - ஈரான் போர்: மத்தியஸ்தம் செய்ய முயலும் பாகிஸ்தானுக்கு சவூதி தாக்குதலால் பின்னடைவு!

ஈரானின் கடல் எல்லை

இந்த நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்காக, போக்குவரத்துப் பிரிப்புத் திட்டம்  ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கப்பல்கள் பாரசீக வளைகுடாவிற்குள் நுழையும் 3 கிலோமீட்டர் அகலம் உடைய உள்வரும் பாதை ஈரானின் கரையை அண்டியே உள்ளது. அதேபோல வளைகுடா கடலில் இருந்து வெளியேறும் 3 கிலோமீட்டர் அகலமான வெளிச்செல்லும் பாதை  ஓமான் பக்கமாக உள்ளது.

எனினும் Outbound lane மற்றும் Inbound lane இரண்டினதும் பெரும்பகுதி ஈரானின் கடல் எல்லைக்குள் அமைந்துள்ளன. புவியியல் மற்றும் சர்வதேச சட்டத்தின்படி, ஹார்முஸ் நீரிணை ஒரு சர்வதேச நீர்ப்பாதையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் | How Long Will The Us Ground Attack On Iran Last

இந்த நீரிணையின் மீதான இறைமை ஈரான், மற்றும் ஓமான் ஆகிய இரு நாடுகளுக்கிடையே பிரிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் தங்கள் கடற்கரையிலிருந்து 12 கடல் மைல் தூரம் வரையிலான பகுதியை தங்கள் பிராந்திய கடல் எல்லையாகக் கொண்டுள்ளனர்.

1974 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இரு நாடுகளும் கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் இந்த கடல் எல்லைகளை உறுதிப்படுத்தியுள்ளன. 1982ல் ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட மாநாடு  ஹார்முஸ் நீரிணை போன்ற சர்வதேச போக்குவரத்து நீரிணைகளில் கப்பல்கள் செல்வதற்கான உரிமைகளை வரையறுக்கிறது.

Transit Passage (போக்குவரத்துப் பாதை உரிமை) UNCLOSன் படி அனைத்து நாட்டுக் கப்பல்களுக்கும் இந்த நீரிணை வழியாக தொடர்ச்சியாகவும் விரைவாகவும் செல்லும் உரிமை உண்டு. இந்த உரிமையை கரையோர நாடுகள் தடை செய்யவோ அல்லது இடைநிறுத்தவோ கூடாது.

ஆனால் ஈரான் UNCLOS-ஐ உறுதிப்படுத்தவில்லை என்பதால், "Transit Passage" உரிமையை விட குறைவான "Innocent Passage" தனக்கு பொருந்தும் என்று வாதிடுகிறது. ஆனாலும், சர்வதேச நீரிணையில் கப்பல் போக்குவரத்தைத் தடுப்பது சர்வதேச சட்டப்படி ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்ற நிலையில் உள்ளது.

ஓமன் வளைகுடாவில் இருந்து ஹோமோஸ் நீரினை ஊடாக பாரசீக வளைகுடாவுக்குள் கப்பல்கள் நுழைகின்ற போது நேர்எதிரே நீரிணையின் வடக்கு கரையோரம் ஈரானின் கிரேட்டர் தன்ப், லெஸ்ஸர் தன்ப், கெஷ்ம் தீவு, ஹோர்முஸ் தீவு, ஹெங்காம் தீவு, லாரக் தீவு உள்ளிட்ட தீவுகள் உள்ளன.

இவை ஈரானின் பலமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இராணுவம் நிலை கொண்டுள்ளது. இவற்றில் கெஷ்ம் தீவு(Qeshm Island) பாரசீக வளைகுடாவின் மிகப் பெரிய தீவு முக்கிய வர்த்தக மற்றும் இராணுவ மையமாக தொழிற்படுகிறது.

திருகோணமலை-பூநகர் கிராமத்தில் ஆயுதங்கள் மீட்பு!

திருகோணமலை-பூநகர் கிராமத்தில் ஆயுதங்கள் மீட்பு!

நட்பு நாடுகள் 

இந்தத் தீவுகளுக்கு அப்பால் வடகரையில் ஈரானின் பெருநிலப்பரப்பின் கடற்கரையோரமாக செங்குத்தான மலைப்பாறைகளும், மலைத்தொடர்களும் இருப்பதனால் இந்த நீரினைக்குள் ஈரானின் கட்டுப்பாட்டை மீறி அத்துமீறி நுழையும் எந்தக் கப்பல்களையும் ஈரானால் இலகுவாக தாக்கி அழித்துவிட முடியும்.

இந்த நீரிணையை ராணுவ நோக்கில் ஈரான் பெருநில பரப்பிலிருந்து கொண்டும், அதனுடைய தீவுகளில் இருந்து கொண்டும் இலகுவாக கட்டுப்படுத்திவிட முடியும்.

ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் | How Long Will The Us Ground Attack On Iran Last

28/02/ 2026 அன்றிலிருந்து இஸ்ரேலும், அமெரிக்காவும் தொடர்ச்சியாக ஈரான்மீது மேற்கொள்ளப்பட்டு வரும் விமான, ஏவுகணை தாக்குதல்களினால் வளைகுடா பகுதியிலும், ஹர்மோஸ் நீர்னையிலும் நிலவும் போர்ப்பதட்டங்களின் காரணமாக, ஈரான் நீரிணையில் தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டும் முயற்சிகளை மேற்கொண்டு இந்த நீரினை மூடப்பட்டு விட்டதாக அறிவித்தது.

அதன் பின்னர் நீரினை எதிரி நாடுகளான இஸ்ரேல், அமெரிக்காவிற்கும் அதனுடைய நட்பு நாடுகளுக்குமே மூடப்பட்டது என்றும் ஈரான் அறிவித்துள்ளது. ஏனைய நட்பு நாடுகள் அந்த வழியை பயன்படுத்தலாம் என்றும் கூறியிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து சர்வதேச சட்டத்திற்கு மாறாக, லாரக் தீவை அடுத்து தனது கடல் எல்லைக்குள் ஒரு கட்டுப்பாட்டு வழித்தடத்தை உருவாக்கியுள்ளது. இந்த வழித்தடம் வழியாகச் செல்ல கப்பல்கள் ஈரானிய அதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டிய நிலை உள்ளது.

அத்தோடு அமெரிக்க இஸ்ரேலின் நியாயமற்ற தாக்குதல்களினால் ஈரானுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடு செய்ய வழித்தடத்தை பயன்படுத்துவோர் சுங்க தீர்வை செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.

இது UNCLOSன் கீழ் உள்ள உரிமைகளை மீறுவதாக பல நாடுகளாலும், சர்வதேச அமைப்புகளாலும் கருதப்படுகிறது. இவ்வாறு வாதிடும் நாடுகள் ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட நியாயமற்ற தாக்குதல்களுக்கு எந்த கண்டனத்தையோ, அதற்கான எதிர்ப்பு குரலையோ, அல்லது போரை நிறுத்துவதற்கான இந்த ஆக்குவமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

இது சர்வதேச அரசியலில் உள்ள முரண்களையும், அவரவர் நலன்கள் சார்ந்து செயற்படுவதையே வெளிப்படுத்தி நிற்கிறது. இந்நிலையில் அமெரிக்கா நீரிணையை திறக்கும்படி பல்வேறு காலகட்ட அவகாசங்களை கொடுத்து இறுதி எச்சரிக்கை விட்டிருந்தாலும் அதனை ஈரான் செவிமடுக்க தயார் இல்லை என்பதை ஈரானுடைய நடவடிக்கைகள் வெளிக்காட்டுகின்றன.

இந்நிலையில் அமெரிக்கா கோமோஸ் நீரிணையை திறப்பதற்காக ஈரானில் தரையிறக்க தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருப்பதும் சர்வதேச அளவில் பெரும் போர் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

ஹோமோஸ் நீரிணை

ஹோமோஸ் நீரிணை ரஷ்யா மற்றும் கஸ்பியன் கடல் நாடுகள் தவிர்ந்த ஏனைய உலகளாவிய அனைத்து நாடுகளுக்கும் அவசியமான கடல்வழிப் போக்குவரத்து வழிப்பாதையாகும். அதனை தொடர்ந்து மூடினால் உலகமே பட்டினிச்சாவை நோக்கிச் செல்லும். ஆகவே அந்த நீரிணை திறக்கப்பட வேண்டியது மிக அவசியமானது.

அதனைப் பேச்சுவார்த்தைகள் மூலம் திறப்பதற்கான வாய்ப்புகள் பெருமளவு இருந்த போதிலும் அதனை தனது படைப்பலத்தால் திறப்பதற்கே அமெரிக்கா விரும்புகிறது. ஏனெனில் படைப்பலத்தின் மூலம் திறக்கப்பட்டால் மாத்திரமே அமெரிக்காவினுடைய தேசிய நலன்கள் பூர்த்தி செய்யப்படும்.

ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் | How Long Will The Us Ground Attack On Iran Last

எனவே அரசுகள் தர்ம நியாயங்களுக்கு அப்பாற்பட்டவை. வெற்றிக்கான பாதையே நியாயமாகவும், வெற்றியே தர்மமாகவும் சர்வதேச அரசியலில் கோலோச்சுகிறது என்ற அடிப்படையில் வெகுவிரைவில் கோமோஸ் நீரினைப் பகுதியில் நியாயமற்ற யுத்தம் தவிர்க்க முடியாத ஒன்றே.  

இப்போது ஈரானின் கார்க்தீவை கைப்பற்ற போவதாக அமெரிக்கா வெளிப்படையாக கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. ஆனால் கார்க் தீவை கைப்பற்றுவதனால் ஹோமோஸ் நீரினையை திறந்துவிட முடியாது என்ற புவியியல் எதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

கார்க் தீவிலிருந்து ஹோமோஸ் நீரிணைக்கும் இடையிலான நேர்கோட்டுத்தூரம்(straight-line) சுமார் 475 கிலோமீட்டர்கள். கடல் வழி (shipping route) தூரம் சுமார் 550 கிலோமீட்டர் தூர இடைவெளி உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கார்க்தீவை கைப்பற்றி அதனைத் தொடர்ந்து வைத்திருப்பதற்கான காரணங்களை சர்வதேச மட்டத்தில் நியாயப்படுத்தவும் முடியாது என்பது மட்டுமல்ல அது ஒரு சிறிய தீவாக இருப்பதனால் அதில் நிலை கொண்டிருப்பது தொடர் இழப்புகளையே ஏற்படுத்தும். வேண்டுமானால் அந்த தீவை அழித்தொழித்து தரைமட்டமாக்கி நாசம் செய்துவிட மாத்திரமே அமெரிக்கா முனையும்.

அப்படியானால் அமெரிக்கா தன்னுடைய இலக்கான ஹோமோ நீரினையை திறந்து அராபிய நாடுகளுடனான வர்த்தகத்தை சீர்படுத்துவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கை நிச்சயமாக ஹோமோஸ் நீர்னையை அண்டிய தீவுகளை கைப்பற்றுவதுதான். அதற்கான தரையிறக்க தாக்குதலை நடத்தினால் மாத்திரமே ஹோமோஸ் நீர்னையை தனது விருப்பத்துக்கு ஏற்றவாறு திறக்க முடியும்.

ஆகவே தாக்குதலுக்கு உட்படப்போகும் ஹோமோஸ் நீரிணையை அண்மித்த தீவுகள் பற்றி இப்போது பார்ப்பதும் அவசியமானது. ஹோமோஸ் நீரினையை அண்டிய லெஸ்ஸர் தன்ப் , கெஷ்ம் தீவு, ஹோர்முஸ் தீவு , ஹெங்காம் தீவு, லராக் தீவு ஆகிய ஆறு தீவுகளும் ஹார்முஸ் நீரிணை பகுதியை கட்டுப்படுத்தவும், ஆளுகை செலுத்துவதற்குமான மிக முக்கியமான தீவுகளாக உள்ளன.

இலங்கையின் முக்கிய வங்கியில் பாரிய உள்மோசடி! சிக்கிய பலர் - வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

இலங்கையின் முக்கிய வங்கியில் பாரிய உள்மோசடி! சிக்கிய பலர் - வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

தாக்குதல்கள்

இந்தத் தீவுகளை கட்டுப்பாட்டில் கொண்ட வரவே அமெரிக்கா பெரிதும் விரும்பும். அதற்கான மூலபாயங்களையும் அது வகுக்கும் என்பது நிச்சயம். இவை அனைத்தும் எண்ணெய், கடல் வர்த்தகம், இராணுவ முக்கியத்துவம் வாய்ந்தவை.

தற்போது இவை ஈரான் மீதான போர் காரணமாக உலக அரசியலில் முக்கியமான மையப் புள்ளிகளாக மாறிவிட்டன. இன்றைய காலச் சூழலில் மிகமுக்கிய பாத்திரம் வகிக்க வல்ல பாரசீக வளைகுடாக்கடலில் உள்ள லராக் தீவு ஹார்முஸ் நீரிணை பகுதியில் சுமார் 0 – 15 km உட்பட்ட Hormuz shipping lanesக்கு மிக அருகில் உள்ள தீவு, என்பதனால் மிக முக்கியத்துவம் பெறுகிறது.

ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் | How Long Will The Us Ground Attack On Iran Last

அவ்வாறே ஹோர்முஸ் தீவு (Hormuz Island) ஹார்முஸ் நீரிணையின் அருகில் 0 – 10 km இடைப்பட்டதாக நேரடியாக நீரிணையின் உள்ளேயே உள்ளது என்பதனால் மிக முக்கிய கேந்திரப் புள்ளியாக அமைந்துள்ளது.

அடுத்ததாக கெஷ்ம் தீவு பாரசீக வளைகுடாவின் மிகப் பெரிய தீவு, முக்கிய வர்த்தக, மற்றும் இராணுவ மையம். Qeshm Island சுமார் 20 – 40 km Hormuz நீரிணையை நேரடியாக ஒட்டிய மிகப் பெரிய தீவு என்ற அடிப்படையில் இத்தீவுகள் மூன்றும் நேரடியாகவும், உடனடித் தாக்குதல் தெரிவாகவும் நீரிணையை கட்டுப்படுத்தவும், நிர்வகிப்பதற்கும் முலோகாய ரீதியில் அவசியப்படுவதனால் இந்தத் தீவுகளே அமெரிக்காவின் பிரதான இலக்காக இருக்கும்.

இந்த தீவுகளை கைப்பற்றுவதற்கான சண்டைகள்தான் அதிகம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இவற்றிற்கு அடுத்தபடியாக ஹெங்காம் தீவு Qeshm தீவுக்கு அருகிலுள்ள ஹோமோஸ் நீரினையிலிருந்து சுமார் 30 – 50 km தொலைவில் உள்ள மீனவர் சமூகங்கள் வாழுத் சிறிய தீவு.

அதனை அடுத்து லெஸ்ஸர் தன்ப் இத்தீவு ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்துடன் நிலத் தகராறும், விவாதப்பிரதிவாதங்களும் உள்ளது. இது நீரிணையிலிருந்து சுமார் 70 – 90km தூரத்தில் இருப்பினும் Hormuz நுழைவாயிலின் முகப்பாக முன்னணி தீவு.

அதேபோலவே Greater Tunb சுமார் 60 – 80 km Hormuz நுழைவாயிலுக்கு அருகிலான முன்னணி தீவாக உள்ளது. அவ்வாறே Abu Musa தீவு ஹோமோஸ்நீரிணையிலிருந்து சுமார் 90 – 120 km தூரத்தில் இருக்கின்ற போதிலும் மிகவும் முக்கியமான மூரோபாயப் புள்ளி என்ற நிலையில் புவிசார் அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருப்பதனால் இரண்டாவது அடுக்கு தறையிறக்க கைப்பற்றல் இலக்காக இத்தீவுகள் அமைவது தவிர்க்க முடியாதது.

இவை அனைத்தும், எண்ணெய், கடல் வர்த்தகம், இராணுவ முக்கியத்துவம் காரணமாக உலக அரசியலில் முக்கியமானவை. Strait of Hormuz பகுதியில் கடல் போக்குவரத்தை கட்டுப்படுத்த ஈரான் புவியியல் ரீதியாக சாதகமான நிலையில் உள்ளது என்பதையும் அமெரிக்கா மேற்கொள்ளக்கூடிய தாக்குதல்கள் பற்றியும் அடுத்த தொடரில் தெளிவாகப் பார்ப்போம்.

மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
அகாலமரணம்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US