பிக்குகளின் போராட்டத்தினால் குழம்பிய அநுர - ஹோட்டலுக்கு சிக்கிய ரகசியத்தால் மாறிய களம்
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் விடுதலைக்காக விகாதரமஹாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகம் முடிந்த பின்னரும் அது தொடர்பான சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேரர்களின் சத்தியாக்கிரகம் நடந்து கொண்டிருந்த போது, தற்போதைய நிலைமை குறித்து, நீதியமைச்சரிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விளக்கம் கோரியுள்ளார்.
இதன்போது சமகால அரசாங்கத்துடன் முறுகல் நிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என திட்டமிட்டு சத்தியாக்கிரகம் முன்னெடுப்பதாக நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
போராட்டத்தின் உண்மைத் தன்மை
“நாங்கள் பதற்றமடையாமல் அமைதியாக இருப்பதுதான் நல்லது, மகாநாயக்க தேரர்களின் அறிவுரைக்கு அமைவாக காரியங்களைச் செய்யுங்கள்” என ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதற்கு ஹர்சன பதிலளிக்கையில், இப்போது எந்தப் பிரச்சினையும் வராது என குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டலுக்கு சர்ச்சைக்குரிய தேரர் சென்றதன் மூலம், பிக்குகளின் போராட்டத்தின் உண்மைத் தன்மை அம்பலமாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக அவர்களின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மோசமடையும் ஷிரந்தியின் உடல்நிலை! பெரும் கவலையில் நாமல் மற்றும் குடும்பத்தினர்: பின்னணியில் தீவிர சட்ட ஆலோசனை