கோட்டாபயவின் அமைச்சரவையினால் சிக்கலில் ரணில்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்த அதே அமைச்சரவையை ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திலும் தொடரக்கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவையை நியமிக்க வேண்டும் என பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் கீழ் மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அரசாங்கம், கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த முறை நியமிக்கப்பட்டதாக காணப்படுகின்றது.
முரணான கருத்துக்கள்
அந்த அமைச்சரவையில் உள்ள பல அமைச்சர்கள் பொதுஜன பெரமுனவின் கருத்துக்களுக்கு முரணான கருத்துக்களைக் கொண்டிருப்பதால், அவர்களை பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களாக கருதக்கூடாது என அந்தக் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனவே, பொதுஜன பெரமுனவின் ஆலோசனைகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய அமைச்சரவையை ஸ்தாபிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவுடன் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் ஊடாக தெரிவு செய்யப்பட்டார்.
கட்சிக்குள் முறுகல்
இந்நிலையில் பெரமுன கட்சியினால் பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிய வருகிறது. அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட முறுகல் நிலையே இதற்கு பிரதான காரணமாகும்.
பொதுஜன பெரமுன கட்சியின் அழுத்தம் காரணமாக, விரைவில் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடும் எண்ணத்தில் ஜனாதிபதி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.





அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

சவால் விட்ட ஜனனி, ஆனால் காத்திருந்த பெரிய அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam

ரஷ்ய எண்ணெய் விவகாரம்... அமெரிக்காவை அடுத்து இந்தியாவிற்கு எதிராக திரும்பும் ஐரோப்பிய நாடுகள் News Lankasri
