சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல்: நாமல் வீட்டில் குவிந்த அரசியல்வாதிகள்
அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்துடன் அரசியல் களம் சூடுபிடித்துள்ளதாக அரசியல்மட்ட உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசேடமாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகளை வெளிப்படையாக விமர்சித்திருந்தார்.
இதனையடுத்து பொதுஜன பெரமுன கட்சி இரண்டு இடங்களில் ஒன்று கூடியது, அதில் ஒன்று மலலசேகர மாவத்தையில் உள்ள நாமல் ராஜபக்ஷவின் வீட்டிலாகும்.
அரசியல் குழப்பம்
இங்கு இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இது தவிர பல கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.
அன்றைய தினம் கொழும்பை சுற்றி தங்கியிருந்த நாடாளும்னற உறுப்பினர்கள் மற்றும் அரச அமைச்சர்கள் அனைவரும் இங்கு வந்தமை விசேட அம்சமாகும்.
இந்த சந்திப்பில் இராஜாங்க அமைச்சர்களே முதலில் பேசியுள்ளனர். எமக்கு செயலாளரைத் தருமாறு ஜனாதிபதியிடம் பலமுறை கூறியும் அவர் செவிசாய்க்கவில்லை. மக்களுக்கு வேலை செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால் ஒரு செயலாளரும் எங்களுக்கான பணம் எவ்வளவு என்பதனை கூட சொல்ல மாட்டார்கள்.
மக்களுக்கு நிவாரணம்
மக்களுக்கு வேலை செய்வதற்குரிய வசதிகளை அவர்கள் வழங்குவதில்லை என்பது உண்மைதான். இவ்வாறான நிலையில் எப்படி மக்களைச் சென்றடைவது.
மேலும் தற்போது மின்சாரக் கட்டணம் பாரிய அளவு அதிகரித்துள்ளதால் வீதியில் இறங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதென இராஜாங்க அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
சலுகைகளை வழங்குமாறு கூறியும் ஜனாதிபதி எதனையும் கேட்பதில்லை என மற்றுமொரு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மக்களை சோர்வடையச் செய்துவிட்டது. மின்சாரக் கட்டணம் அதிகம், தண்ணீர்க் கட்டணம் அதிகம், தொழில் வல்லுநர்களின் சம்பளத்துக்கு வரி விதிக்கப்படுகிறது, மக்கள் மீது வரி விதிக்கப்படுகிறது என்று நாமல் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத்திட்டம்
இதற்கான தீர்வாக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் சலுகைகள் வழங்கப்படுமா என மற்றொரு இராஜாங்க அமைச்சர் கவலை வெளியிட்டுள்ளார்.
நாட்டை கட்டியெழுப்ப 2048 வரை காத்திருக்க வேண்டுமா? குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுக்க 2030 வரை காத்திருக்க வேண்டுமா? மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கக் கோர வேண்டியுள்ளதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஆலோசனை பெறுவோம். மேலும், பசில் ராஜபக்ஷவுக்கும் தெரியப்படுத்துவோம் என நாமல் தெரிவித்தார்.
அரசாங்கம் கலைக்கப்படுவதாக வெளியான செய்திகள் வதந்தி. எனினும் நாங்கள் தேர்தலுக்குத் தயாராக இருக்கிறோம் எனவும் நாமல் கூறியுள்ளார்.
அன்றைய தினம் இரவு உணவு வழங்க நாமல் ராஜபக்ஷ ஏற்பாடு செய்திருந்தார். இங்கு பிரத்தியேகமாக சைவ உணவு தயாரிக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.