கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பாரிய தீ விபத்து: காரணத்தை வெளியிட்ட பொலிஸார்
கொழும்பில் நேற்று ஏற்பட்ட பாரிய தீ விபத்திற்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
நேற்று காலை கடையை திறக்கும் போது கடைக்கு சாம்பிரானி புகைபிடிக்கும் போது டீசல் கொள்கலனில் தீ பரவியது.
சில நிமிடங்களுக்குள் ஜெனரேட்டர் வரை தீ பரவியமையே இதற்கு காரணமாகியுள்ளதென பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
தீ ஏற்பட்டமைக்கான காரணம்
கொழும்பு, புறக்கோட்டை 2ஆவது சந்தியில் உள்ள ஆறு மாடி கட்டிடம் ஒன்றில் நேற்று காலை 09.30 மணியளவில் தீ பரவியுள்ளது.
ஆடை கடையொன்று தீக்கிரையாகியுள்ளதுடன், கடை திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, விரைந்து செயற்பட்ட கொழும்பு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
தீயணைப்பு வாகனங்கள் 11 மற்றும் 45 அதிகாரிகள் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பணியாளர்கள் மீட்பு
தீ விபத்து ஏற்பட்டதையடுத்து கட்டடத்திற்குள் சிக்கியிருந்தவர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீக்காயங்கள் மற்றும் சுவாச கோளாறுகளுடன் 20 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை முழுமையாக கட்டுப்படுத்தினர்.
எவ்வாறாயினும், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புடவைகள் மற்றும் ஏனைய ஆடைகள் மற்றும் கட்டடம் தீயினால் பலத்த சேதமடைந்துள்ளன.

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
