ரணிலுக்கு பெரும் அவமானம் - மகிந்தவிடம் தஞ்சமடைந்த முக்கியஸ்தர்கள்
அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் சந்தித்து தொழில் வாய்ப்புகளை கேட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
வாழ்வதற்கு கடினமாக உள்ளதென கூறி ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஆசன அமைப்பாளர்கள் 12 பேர் இவ்வாறு மகிந்தவிடம் உதவி கோரியுள்ளனர்.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள அழுத்தத்திற்கு முகங்கொடுக்கும் வகையில் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் பதில் தலைவர், பதில் பணிப்பாளர் போன்ற பதவிகளை தமக்கு வழங்குமாறு மகிந்தவிடம், இந்தக் குழு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகிந்தவிடம் தஞ்சம்
சமகால ஜனாதிபதி பிரதமராக இருந்த காலம் முதல் தமது கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாமையே மகிந்த ராஜபக்சவை சந்திப்பதற்கான காரணம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, பதவிகளை தேடி வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பலருக்கு கூட்டுத்தாபனங்களில் உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
ரணிலின் பரிதாப நிலை
தற்போதைய அரசாங்கத்தின் அனைத்து பதவிகளின் சலுகைகள் மற்றும் வெகுமதிகள் தொடர்பில் மகிந்த மற்றும் பசில் ஆகியோர் இறுதித் தீர்மானத்தை எடுப்பார்கள் எனவும், தற்போதைய ஜனாதிபதி அந்த பரிந்துரைகளை மாத்திரமே அமுல்படுத்துவார் எனவும் அரசாங்கத்தின் பலம் வாய்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.