மொட்டுக் கட்சியின் மாநாட்டுக்கு பா.ஜ.க. தலைவருக்கு அழைப்பு
இந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவரான அமித் ஷாவை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாநாட்டுக்கு அழைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சியின் விசேட கூட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் விசேட கூட்டம், பசில் ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு முன்னர் நடைபெற்றுள்ளது.
கட்சியின் அடுத்தகட்ட நகர்வு, கட்சி மாநாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
பசிலின் உறுதி

இதன்போது,மொட்டுக் கட்சியின் மாநாட்டுக்கு, பாரதிய ஜனதாக் கட்சி தலைவரை அழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான முயற்சி முன்னெடுக்கப்படும் என பசில் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும், அமித் ஷாவின் வருகை தொடர்பில் இன்னும் உத்தியோகபூர்வமாக தகவல்
எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தமிழ் அரசியலை பலப்படுத்த அரசியல் தலைவர்களை தூய்மைப்படுத்த வேண்டும்..! 41 நிமிடங்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri