எந்த நேரத்திலும் பொதுஜன பெரமுனவினால் ரணிலுக்கு ஏற்படவுள்ள ஆபத்து: ஜி.எல்.பீரிஸ் எச்சரிக்கை
கண்ணுக்கு தெரியாத கரம் ஒன்று அரசாங்கத்தையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையும் கட்டுப்படுத்துவதாக முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளருமான ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலடியில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, எந்த நேரத்திலும் கம்பளத்தை இழுக்க முடியும் என பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் ஒரு கண்ணுக்கு தெரியாத கை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு அதீத அதிகாரங்கள் உள்ளன என்று ஜி.எல் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையானது சட்டத்தின் கட்டமைப்பிற்குள் இயங்குகிறது.
எனினும் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு சக்தியால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்று பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொதுஜன பெரமுன கட்சியை சிறு குழுவொன்று கைப்பற்றியுள்ளதால் கட்சி கூட்டங்களில் தாம் கலந்து கொள்வதில்லை என்று ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 13 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
