இலங்கையின் அரசியல் ஸ்திரமற்ற தன்மை தொடரும் வாய்ப்பு: சர்வதேச சந்தை புலனாய்வு அறிக்கை
இலங்கையில் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுகள் ஆசியா மற்றும் பசுபிக் முழுவதும் சமூக மற்றும் தொழிலாளர் அமைதியின்மையை சீர்குலைக்கும் அபாயத்தை காட்டுகின்றது என சர்வதேச சந்தை புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கை போன்ற பலவீனமான பொருளாதார அடிப்படைகள் அல்லது மோசமான பொருளாதார கொள்கைகளை கொண்ட நாடுகள், கோவிட் தொற்றுநோய், ரஷ்யா - உக்ரைன் மோதல், எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் போன்ற வெளிப்புற அதிர்ச்சிகளை தாங்கும் திறனை கொண்டிருக்கவில்லை. அத்துடன் சமூக அமைதியின்மையை உறுதிப்படுத்துகின்றன.
இலங்கை பாதிப்பு
உதாரணமாக, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் லாவோஸ், குறிப்பாக இதே போன்ற நெருக்கடிகளால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளாகும் என சர்வதேச சந்தை புலனாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம், 2022 மார்ச் முதல் பொருளாதார சரிவால் வெகுவான பொது எதிர்ப்புகளை எதிர்கொண்டுள்ளது.
உணவு, எரிபொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மொத்தமாக சிதைக்க தூண்டியது.
ஸ்திரமற்ற தன்மை தொடர வாய்ப்பு
இலங்கையின் புதிய இடைக்கால அரசாங்கம், முக்கியமாக சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய பலதரப்பு கடன் வழங்குநர்கள் மூலமாகவும், சீனா மற்றும் இந்தியா உட்பட நெருங்கிய மூலோபாய பங்காளிகளிடமிருந்தும் அத்துடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை முடிப்பதற்கும் குறுகிய கால முயற்சிகளில் கவனம் செலுத்த முற்படுகிறது.
எனினும், உள்நாட்டு சமூக நிலைமைகளில்,2023 வரை முன்னேற்றம் சாத்தியமில்லை. இதையும் தாண்டி, அரசியல் ஸ்திரமின்மை தொடர வாய்ப்புள்ளது” என மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு |