இலங்கையின் கடன் நிபந்தனை தொடர்பில் வெளியான தரப்படுத்தல்
எனினும், நாடு சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி மற்றும் உத்தியோகபூர்வ இருதரப்பு கடனாளர்களிடமிருந்து கடன் மறுசீரமைப்பை செய்யும்போது பல சவால்கள் உள்ளன என்று ஃபிட்ச் தெரிவித்துள்ளது.
புதிய ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையுடன் உறுதி செய்யப்பட்டார். அவரது அரசாங்கம் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் கவர்ந்தது. இது, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக நம்பிக்கையை அளிக்கிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி ஆதரவு
இவ்வாறான சீர்திருத்தங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி ஆதரவை ஏற்படுத்தும். இந்த நிலையில், அரசாங்கத்தின் நாடாளுமன்ற நிலைப்பாடு வலுவாகத் தோன்றினாலும் அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு பலவீனமாக உள்ளது என்று ஃபிட்ச் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் நாடாளுமன்றம் மற்றும் அரசாங்கம் என்பன, ராஜபக்ச குடும்பத்துடன் நெருக்கமாக தொடர்புடைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது.
எதிர்காலத்தில் ஏற்படவுள்ள பாரிய நெருக்கடி
இந்த சூழ்நிலையில் பொருளாதார நிலைமைகள் மேம்படவில்லை அல்லது சீர்திருத்தங்கள் பொதுமக்களின் எதிர்ப்பை உருவாக்கினால் அது, அபாயத்தை அதிகரிக்கலாம். சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் இல்லாத நிலையில் இலங்கை எதிர்காலத்தில் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக பிட்ச் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாத இறுதியில் வெறும் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களையே கையிருப்பதாக கொண்டிருந்தது. இதனைக்கொண்டு ஒரு மாதத்துக்குரிய அத்தியாவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்யமுடியாது.
சீனாவிற்கு செலுத்த வேண்டிய கடன் காரணமாக, அந்த நாட்டுடன் கடன் பேச்சுவார்த்தைகள் சிக்கலாக இருக்கலாம். இது, சர்வதேச நாணய நிதியத்தால் கோரப்படும் மறுசீரமைப்புக்கான சவால்களை அதிகரிக்கலாம் என்றும் பிட்ச் குறிப்பிட்டுள்ளது.