மோசமடையும் வங்கி நிலமைகள்! இக்கட்டான நிலையில் இலங்கை - பேராசிரியர் தகவல் (VIDEO)
இலங்கை மத்திய வங்கிக்கு உள் செல்லும் பணம் குறைவாகவும்,வங்கிகளின் ஊடாக இறக்குமதிக்கு செலுத்தப்படும் பணத்தொகை அதிகமாகவும் உள்ளதாக கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கலாநிதி கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதனை மத்திய வங்கியினால் கட்டுப்படுத்த முடியாத நிலையில்,மத்திய வங்கி மேலும் பொருட்களுக்கான தடைகளை இறுக்குவதற்கு முயற்சிப்பதாகவும்,நிதியமைச்சை அணுகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில்,மத்திய வங்கி குறிப்பிடுவது போன்று பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டால் எரிபொருள் போன்று வெங்காயம்,அரிசி,மா,சீனி என்பனவற்றிற்கும் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையேற்படும் என்றும்,இதன் காரணமாக நிதியமைச்சு இரு பக்கத்திலும் தள்ளாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| கோட்டாபயவை முக்கியமான இடத்தில் பாதுகாக்க தயாராகும் சக்திகள் - அரசியல் ஆய்வாளர் தகவல் |
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri