எரிபொருள் இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்
இந்த ஆண்டின் (2026) முதல் ஆறு மாதங்களில் (ஜனவரி-ஜூன்), எரிபொருள் இறக்குமதி செலவினம் 58.8 சதவீதம் அதிகரித்து 3,168.4 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி இறக்குமதி
இதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், எரிபொருள் இறக்குமதிச் செலவினம் 1,995.7 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்துள்ளது.

இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், எரிபொருள் இறக்குமதிச் செலவினம் 58.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை மேலும் குறிப்பிடுகின்றது.
இந்த காலகட்டத்தில், கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவினம் 7.5 சதவீதம் அதிகரித்து 479.5 மில்லியன் அமெரிக்க டொலராகவும், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய இறக்குமதிச் செலவினம் 78.7 சதவீதம் அதிகரித்து 2538.6 மில்லியன் அமெரிக்க டொலராகவும் உயர்ந்துள்ளது.
நிலக்கரி இறக்குமதிச் செலவினமும் 16.1 சதவீதம் அதிகரித்து 150.4 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.