விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை விரும்பாத முன்னாள் ஜனாதிபதி:வெளிவரும் தகவல்-செய்திகளின் தொகுப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை விரும்பவில்லை, வன்னிக்கு சென்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவே விரும்பினார் என புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், "2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியாத நிலையிலே மகிந்த இருந்தார். அப்போது ஜாதிக ஹெல உறுமயவில் இருந்த நாங்கள் கடுமையாக பாடுபட்டு வெற்றிபெற செய்தோம்.
வெற்றி பெற முடியாத நிலையில் இருந்த மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற வைத்ததுடன், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை தவிர்த்து பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்பியவரை யுத்தத்தில் தள்ளி வெற்றிபெற செய்ததும் நாங்களே.
யுத்தத்தின் பின்னர் மக்கள் மத்தியில் ஆதரவை பெற்று மீண்டும் அவர் ஜனாதிபதியாக வருவதற்கு காரணமாக இருந்தது நாமே.
மகிந்தவின் பின்னால் இருந்த நாங்கள் வெற்றி பெறவில்லை எங்களால் தான் மகிந்த வெற்றி பெற்றார்.” என கூறியுள்ளார்.
இது தொடர்பான பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
