விரைவில் டெல்லியில் இருந்து இலங்கை வரும் விசேட குழு (Video)
தற்போது இலங்கை அரசைப் பொறுத்தவரைக்கும் ஜப்பானில், அமெரிக்கா குண்டு போட்டு அழித்ததை போன்று ஒரு நிலைமையில் இருந்து மீள வேண்டுமானால் இந்தியாவின் ஆதரவு ரணிலுக்கு பரவலாக தேவைப்படுகின்றது என இலங்கையில் இருக்கும் சட்டவாளரும், அரசியல் ஆய்வாளருமான நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியா பக்கம் சாய்வதற்கான வழிவகைகளை செய்து வருகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வந்திருந்த போது, பல திட்டங்களை நிறைவேற்ற உள்ளதாகும், அதற்காக 13ஆவது திருத்தத்தை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று ஒரு திடமான வாதம் ஒன்றை முன்வைத்துச் சென்றிருக்கின்றார்.
இதன்போது, ஜெய்சங்கரிடம், ரணில் விக்ரமசிங்க அதை எதைக் கொண்டும் நிறைவேற்றுவேன் உன உறுதியளித்துள்ளார்., இதே கருத்தை அண்மையில் வடக்கில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனனிடமும் ரணில் குறிப்பிட்டுள்ளார் எனவும் அரசியல் ஆய்வாளர் நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,