நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்தப் பிரேரணை அரசாங்கத்தின் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் சுயேட்சை உறுப்பினர்களுக்கும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ்ஸின் இல்லத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு வழங்கப்படும் என உறுதிப்படுத்தியுள்ளனர்.
நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டால் இடைக்கால அரசு அமைப்பது குறித்தும் இந்த கலந்துரையாடலின் போது ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும் அறிவியல் அடிப்படையில் அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதுடன், அமைச்சர் பதவிகளின் எண்ணிக்கையை 22 ஆக மட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இடைக்கால அரசாங்கத் தலைவர்களின் பங்களிப்புடன் நிறைவேற்று சபையும் அமைக்கப்படும்.