சம்பிக்க - சரத் பொன்சேகா ஊடாக மிகப் பெரும் இரகசிய நகர்வு (Video)
இந்தியா மற்றும் அமெரிக்கா சம்பிக்க ரணவக்க மற்றும் சரத் பொன்சேகாவை பயன்படுத்தி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலை வீழ்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக மூத்த ஊடகவியலாளர் நிக்ஸன் தெரிவித்தார்.
கடும் போராட்ட காலத்தில் கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிய பின்னர், அடுத்த ஜனாதிபதியாக வரக்கூடியவர் ரணில் விக்ரமசிங்கவாக இருக்கக் கூடாது என்பதில் இந்தியா மற்றும் அமெரிக்கா கவனமாக இருந்திருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஆனால் இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரன் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே வரவேண்டிய சூழல் ஏற்பட்டது என அவர் சுட்டிக்காட்டினார்.
ஏனென்றால், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்திலேயே, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தார்.
அதன் பின்னர் போராட்டம் தீவிரமடைந்து, கோட்டாபய பதவியை துறந்த நிலையில் அரசியல் யாப்பின் பிரகாரம் ரணில் ஜனாதிபதியானார் எனவும் தெரிவித்தார்.
மேலும் குறிப்பிடுகையில்,
2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் தென்னிலங்கையில் பிரதான அரசியல் கட்சிகள் பிளவுப்பட்டுள்ளன.
இன்று வரை ஒரு சரியான ஆட்சியை செய்ய முடியாமல் இருக்கின்றது.
கோட்டாபய ராஜபக்ச அதிக பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெற்றார். அவரது அரசாங்கம் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டது. ஆனால் அவரது அரசாங்கம் மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே சிதறிவிட்டது என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |