போராட்டக்காரர்களை வைத்து மகிந்த போடும் திட்டம்! மற்றுமொரு அரசியல் மாற்றத்திற்கான தீவிர நகர்வு
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 காலி முகத்திடல் போராட்டக்காரர்களை இணைத்துக் கொண்டு அரசியல் மாற்றம் செய்வது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அவதானம் செலுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மகிந்தவின் அடுத்தகட்ட திட்டம் அம்பலம் >>> மேலும்படிக்க
2 வன்முறைக்கு அடக்குமுறையே ஒரே பதில் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ரணிலின் செயற்பாட்டினால் மகிழ்ச்சியில் நாமல் >>> மேலும்படிக்க
3 இலங்கையிலிருந்து வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முக்கிய அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது. இதற்கமைய, வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்யும் இலங்கையர்களின் தேவை வேகமாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த வருடத்தில் மாத்திரம் 2 இலட்சத்து 8 ஆயிரத்து 772 இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலிருந்து வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் >>> மேலும்படிக்க
4 அரசாங்கத்தின் கடன் வட்டி 26,300 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நிதியமைச்சின் சமீபத்திய புள்ளிவிபரங்களுக்கமைய, வங்கி வட்டி விகித உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதால், இந்த ஆண்டு அரசின் கடன் வட்டி செலவு அதிகரித்துள்ளது.
அரசாங்கத்தின் கடன் வட்டி அதிகரிப்பு >>> மேலும்படிக்க
5 2020ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை 21856 ஆல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு வெளியிட்டுள்ள 2021 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அரசாங்க ஊழியர்கள் எடுக்கும் முடிவு! >>> மேலும்படிக்க
6 இலங்கைக்கு கிடைக்கும் பணத்தில் 40 வீதம் கொள்ளையிடப்படுவதாக உலக வங்கி கூறுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கிடைக்கும் பணத்தில் 40 வீதம் கொள்ளையிடப்படுகிறது! உலக வங்கி கூறியதாக மத்தும பண்டார தகவல் >>> மேலும்படிக்க
7 சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு வசதியாகத்தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்
கோட்டாபய பதவி விலகியதன் காரணம்! ரணில் பதவியேற்றதன் பின்னணி: வெளிவரும் புதிய தகவல்கள் >>> மேலும்படிக்க
8 ரணில் விக்ரமசிங்க என்ற பூச்சாண்டியை காட்டியே அன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 69 லட்சம் மக்களின் ஆணையை பெற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
"ரணில் என்ற பூச்சாண்டியை காட்டியே 69 லட்சம் வாக்குகளை பெற்றோம்" >>> மேலும்படிக்க
9 இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் உயர்நிலை அதிகாரியான சமந்தா பவர் வயல் நிலங்களை சென்று பார்வையிட்டதுடன், அங்கு விவசாயிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இலங்கை அரசியல்வாதிகளின் முகங்களில் கரியை பூசிய அமெரிக்காவின் உயர் அதிகாரி >>> மேலும்படிக்க
10 பிரித்தானிய மகாராணி மறைந்த இரண்டாம் எலிசபெத்தின் உடல் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் இருந்து எடின்பர்க் நகருக்கு முழு அரசு மரியாதையுடன் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் மகாராணியின் உடலம் தாங்கிய பேழை இறுதி பயணத்தை ஆரம்பித்தது >>> மேலும்படிக்க