அரசாங்கத்தினால் ராஜபக்சர்களுக்கு கொழும்பில் ஒதுக்கப்பட்டுள்ள நான்கு உத்தியோகபூர்வ இல்லங்கள்
அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்ய தயாராகவுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த உத்தியோகபூர்வ இல்லமானது பௌத்தாலோக்க மாவத்தை மற்றும் மலலசேகர மாவத்தைக்கு அடுத்ததாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவும் இந்த வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

ராஜபக்ச குடும்பத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகள்
மேலும், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு அரசாங்கம் 2 உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்கியுள்ளதுடன்,அவற்றில் ஒன்று விஜேராம மாவத்தையிலும் மற்றையது புல்லர்ஸ் வீதியிலும் அமைந்துள்ளது.

இதன்படி ராஜபக்ச குடும்பத்திற்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வீட்டு ஒதுக்கீட்டில் இருந்து 4 வீடுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கடந்த வாரம், முன்னாள் ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறியதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய எந்தவொரு சலுகையையும் பெற அவருக்கு உரிமை இல்லை என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam