கோட்டாபயவுக்கு கிடைக்கவுள்ள சிறப்புரிமை
கோட்டாபய ராஜபக்ச ஓய்வு பெற்ற முன்னாள் ஜனாதிபதிக்கான சிறப்புரிமையை பெறுவார் என ஜனாதிபதியின் சட்டத்தரணி கலாநிதி ஜயதிஸ்ஸ டி கொஸ்தா தெரிவித்துள்ளார்.
உரிய காலத்திற்கு முன்னர் பதவியை இராஜினாமா செய்தாலும், இந்த சிறப்புரிமைகள் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
1986 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரிமைகள் சட்டத்தில் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அவருக்குப் பின் அவரது மனைவிக்கும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளின் பதவிக்காலம் குறித்து ஆராயும் போது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அதிக காலம் பதவியில் இருந்துள்ளார். அவர் 11 ஆண்டுகள் மற்றும் ஏழு மாதங்களில் இரண்டு முறை ஜனாதிபதி பதவியை வகித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியாக பதவியேற்ற கோட்டாபய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய முதலாவது ஜனாதிபதியாக வரலாற்றில் இடம்பெறுவார்.
அவர் இரண்டு ஆண்டுகள், ஏழு மாதங்கள் மற்றும் 25 நாட்கள் அந்த பதவியில் பணியாற்றியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 16 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
