விரட்டியடிக்கப்பட்ட தலைவர்கள் அணிந்துள்ள புதிய முகமூடி! அனுர சாடல்

Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa Ranil Wickremesinghe
By Chandramathi Dec 18, 2023 02:49 AM GMT
Report

எம்மை கஷ்டத்தில் தள்ளிய ஆட்சியாளர்கள், தற்போது புதிதாக முகமூடி அணிந்து கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முயற்சிக்கின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

விரட்டியடிக்கப்பட்ட தலைவர்கள்

பொதுஜன பெரமுனவின் மாநாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,''கடந்த வருடம் மே, ஜூன் காலப்பகுதியில் விரட்டியடிக்கப்பட்ட தலைவர்கள் குறிப்பாக கொழும்பில் இருந்த மகிந்த ராஜபக்ச எங்கு சென்று மறைந்தார்? திருகோணமலை முகாமில் மறைந்திருந்தார்.

விரட்டியடிக்கப்பட்ட தலைவர்கள் அணிந்துள்ள புதிய முகமூடி! அனுர சாடல் | Sri Lanka Political Crisis

கொழும்பிலிருந்த பசில் மேலே பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரில் இருந்தார். கொழும்பிலிருந்து நாமல், தந்தையுடன் முகாமிற்கு சென்றார். கோட்டாபய மாலைத்தீவில் இருந்தார். பின்னர் சிங்கபூருக்கு சென்றார். இவை அனைத்தும் நினைவிருக்கிறதா?

பொலிஸ் அதிகாரிகள் போன்று வீடொன்றிற்குள் நுழைந்த கும்பல் செய்த செயல்

பொலிஸ் அதிகாரிகள் போன்று வீடொன்றிற்குள் நுழைந்த கும்பல் செய்த செயல்


ஆனால் தற்போது மாநாடு ஒன்றை நடத்தி இருக்கிறார்கள். அவர்கள் தலைவராக மீண்டும் மகிந்தவை தெரிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் வருகிறார்கள். ஏன் நாட்டை கட்டியெழுப்புவதற்காகவா? மக்கள் அவர்களுக்கு அதிகாரத்தை கொடுப்பார்களா? நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

மக்கள் வெட்கப்பட வேண்டும்

எம்மை கஷ்டத்தில் தள்ளிய ஆட்சியாளர்கள் தற்போது புதிதாக முகமூடி அணிந்து கொண்டு மீண்டும் வருவதற்கு முயற்சிக்கின்றனர். காட்டுச்சட்டமே நாட்டில் உள்ளது. குற்றவாளிகளே ஆட்சியில் உள்ளனர்.

விரட்டியடிக்கப்பட்ட தலைவர்கள் அணிந்துள்ள புதிய முகமூடி! அனுர சாடல் | Sri Lanka Political Crisis

ரணில் விக்ரமசிங்க மற்றும் மகிந்த ஆகிய இரண்டு தரப்பினரும் முன்னர் ஒருவருக்கு ஒருவர் போரிடும் எதிரிகளாக தெரிந்தார்கள். தற்போது அவர்கள் இருவரும் ஒரே அரசாங்கத்தில் இருக்கிறார்கள்.

மகிந்த, கோட்டாபய, பசில், அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட பலர் குற்றவாளிகள். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூட குற்றவாளி. நீதிமன்றத்தில் அபராதம் விதித்துள்ளனர். இவ்வாறான ஆட்சியாளர்களின் இருப்பதை நினைத்து நாட்டு மக்கள் வெட்கப்பட வேண்டும்.''என கூறியுள்ளார்.

திருமண நிகழ்வில் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட மகிந்த

திருமண நிகழ்வில் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட மகிந்த

தொடரும் சீரற்ற காலநிலை! விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை

தொடரும் சீரற்ற காலநிலை! விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை


மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US