பொலிஸ் அதிகாரிகள் போன்று வீடொன்றிற்குள் நுழைந்த கும்பல் செய்த செயல்
குருணாகல், வாரியபொல பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு வீடொன்றிற்குள் புகுந்தவர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அங்கிருந்த தங்கச் சங்கிலியை திருடிச் சென்றுள்ள நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரொம்புவ, பத்ராவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று இரவு இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பண்டாரகம பொலிஸ்
ஒரு சிலர் வெள்ளை வேனில் வந்து, தாங்கள் பண்டாரகம பொலிஸ் நிலையத்தை சேர்ந்தவர்கள் எனவும், வீட்டை சோதனையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சோதனையின் பின்னர் அவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றபோது வீட்டில் இருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனது தெரியவந்தது.
சம்பவத்தின் போது ஊனமுற்ற தாயும் தானும் மட்டுமே வீட்டில் இருந்ததாக வீட்டின் உரிமையாளரான பெண் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan