இலங்கையில் நிலவும் மோசமான வானிலை - பொலிஸார் எச்சரிக்கை
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், பாணந்துறை - பன்னமபுர வீதியில் ஒரு கார் சறுக்கி கால்வாயில் கவிழ்ந்து விபத்துள்ளாகி உள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் காரில் இரண்டு பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். எனினும் விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
வீதி வழுக்கும் தன்மை
அந்த பகுதி மக்கள் கயிறுகளின் உதவியுடன் காரை மீட்க இணைந்து பணியாற்றினர்.
முன்னால் வாகனம் வந்தபோது காரின் ஓட்டுநர் பிரேக் போட்டதாகவும், மழை காரணமாக வீதி வழுக்கும் தன்மை கொண்டதால், கார் வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல பகுதிகளில் இவ்வாறு விபத்து சம்பவம் இடம்பெறுவதாகவும் அவதானமாக செயற்படுமாறும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




