இலங்கையில் பொலிஸாரின் மோசமான செயல்: பசியால் தவித்த குடும்பம்
கம்பளையில் முக்கிய பிரமுகர் ஒருவர் பயணித்த வீதியொன்றின் முன்னால் பலாக்காய் ஒன்றை கழுத்தில் வைத்த நிலையில் தந்தையும் அவரின் பிள்ளையையும் பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.
குறித்த பிரமுகர் அவ்விடத்தை விட்டு செல்வும் வரை தந்தையையும் மகனையும் அவ்வீதி வழியே செல்ல அனுமதிக்கவில்லை என தெரியவந்துள்ளது. இதனால் அந்த குடும்பத்திற்கு ஒரு நேர உணவு இல்லாமல் போய்விட்டதாக தந்தை குறிப்பிட்டுள்ளார்.
கண்டி தலதா பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹராவை பார்வையிடுவதற்காக கண்டிக்கு வந்துள்ள இந்த பிரமுகர், பெரஹரா ஆரம்பிப்பதற்கு முன்னர், யாரிடமும் அறிவிக்காமல் வாரியகல பிரதேசத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மதிய உணவுக்காக சென்றுள்ளார்.
பொலிஸ் அதிகாரி
பிரமுகர் யாருக்கும் தெரிவிக்காமல் இந்த பகுதிக்கு வந்தாலும், அப்பகுதி உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் தனது மகனுடன் மதிய உணவிற்கு பலாப்பழம் ஒன்றை தேடிக் கொண்டு, பிரமுகர் வரும் பாதையில் பயணிப்பதனை கண்டு பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர்.
மேலும், மூன்று பிள்ளைகளும் மனைவியும் பசியுடன் இருந்ததால், பழாக்காயை எடுத்துச் செல்வதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார். எனினும் தந்தையையும் பிள்ளையையும் பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளதுடன் பிரமுகம் வெளியேறும் வரை தடுத்து வைத்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கூலி வேலை
இதன் காரணமாக அன்றைய மதியம் தானும் மனைவியும் 3, 7 மற்றும் 9 வயதுடைய பிள்ளைகளும் பட்டினியால் வாட நேர்ந்ததாகவும் அவர் கூறினார்.
தனக்கு வேலை இல்லை என்றும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துவதாகவும் தந்தை கூறியுள்ளார்.