பொலிஸார் தவறு செய்தால் உடனடியாக அறியத்தரவும்: பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
பொலிஸார் தவறு செய்தால் உடனடியாக அறியத்தருமாறு வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சி.பி. விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வவுனியா - மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சி.பி. விக்ரமசிங்கவுக்கும் ஊடகவியலாளர்களுக்குமான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (20.07.2023) அத்தியட்சகரின் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும்போதே பொலிஸ் அத்தியட்கர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவித்துள்ளதாவது, வவுனியா மாவட்டத்தில் பல பொலிஸ் நிலையங்களில் பொதுமக்களின் பல முறைப்பாடுகளை ஏற்க பொலிஸார் மறுக்கின்றனர்.
கடுமையான நடவடிக்கை
அதேவேளை திருட்டு சம்பவங்கள் பற்றி பொதுமக்கள் பொலிஸாரிடம் முறையிடும் போதும் ஒரு சில பொலிஸார் அதன் உண்மையான பெறுமதிகளை மறைத்து தவறான பெறுமதிகளை முறைப்பாட்டில் பதிவிடுவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இவ்வாறு செயல்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இது போன்ற சம்பவங்கள் வவுனியாவில் இடம்பெற்றால் பொதுமக்கள் உடனடியாக தமக்கு தெரியப்படுத்தவும்.
பொதுமக்கள் தன்னை எந்த நேரத்திலும் அழைக்க முடியும் என்றும் 071-8591340 என்ற தொலைபேசி ஊடாக தகவல்களை நேரடியாக தமக்கு அறிவிக்க முடியும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |