இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்த முக்கிய அறிவிப்பு
பத்தரமுல்ல, இசுஹுருபாய கட்டடத்தின் 17ஆவது மாடியில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்படும் பொலிஸ் அனுமதி அறிக்கை தரவு அமைப்பில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த அனுமதி சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தல், அறிக்கைகளை கோருதல் மற்றும் சான்றிதழ்களை அச்சிடுதல் ஆகிய நடவடிக்கைகள் தரவு அமைப்பொன்றின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
குறித்த தரவு அமைப்பு நேற்று நண்பகல் முதல் செயலிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் அனுமதி அறிக்கை
இது தொடர்பாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தரவு அமைப்பை மீளச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த தரவு அமைப்பு மீள செயல்படும் வரை பொலிஸ் அனுமதி அறிக்கைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தரவு அமைப்பு மீளவும் இயங்கியவதுடன் பொலிஸ் அனுமதி அறிக்கைகளுக்கான விண்ணப்பங்களை மீண்டும் சமர்ப்பிக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.